இயற்கை சுற்றுச்சூழல் வாழ்வியல்

கனமழை: பழைய கட்டடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர், மயிலாடுதுறை ,நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,நெல்லை, மதுரை, மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல்

தமிழக கடலோர மாவட்டங்களில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் கனமழை- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை முதல் நாகை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட மேலும் வாசிக்க …..

இயற்கை

தமிழகத்தில் அக்டோபர் 19 முதல் 21 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அக்டோபர் 19 முதல் 21 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதன் மேலும் வாசிக்க …..

இயற்கை

14 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருமழை தீவிரமடைந்து, பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. நேற்றிரவு மதுரை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணிநேரத்தில் அரியலூர் திருச்சியில் அதிகபட்சமாக 11 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. கரூரில் 10 செமீ மழையும், பெரம்பலூரில் 6 செமீ மேலும் வாசிக்க …..

இயற்கை கேரளா சுற்றுச்சூழல்

கேரளாவில் மழையால் மண்சரிவில் சிக்கி 60 பேர் பலி

கேரளாவின் வடக்கு மாவட்டங்களான வயநாடு, மலப்புரம், கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது.   மழை நீடிப்பால் மாவட்டத்தின் மலை கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டன. வயநாடு மேப்பாடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.   வீடுகள், ஆலயங்கள், மசூதிகள் மண்ணுக்குள் புதைந்தன. இதுபோன்று 8 மாவட்டங்களிலும் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு, எங்கு பார்த்தாலும் மண்ணுக்குள் புதைந்தது போலவும், வெள்ளக்காடாகவும் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டங்களுக்கு மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல் தமிழ்நாடு

மழை புரட்டி போட்ட நிலகிரி மாவட்டம் , அவலாஞ்சியில் ரிக்கார்ட் பதிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.   இதனால், மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மழை ஓய்ந்தபோதிலும், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பல்வேறு கிராமங்களும் தண்ணீரில் தத்தளிக்கிறது.   மழையால் பாதிக்கப்பட்ட 2,500 பேர், 135 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.    குன்னூர் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் மலைரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் சேவை மேலும் வாசிக்க …..

உலகம் கேளிக்கை சமூகம்

சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்து பதிவிட்ட டைட்டானிக் ஹீரோ லியானார்டோ

சென்னையில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை மழையால் மட்டுமே தீர்க்க முடியும் என டைட்டானிக் ஹீரோ லியானார்டோ கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் கடந்த சில மாதங்களாக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. மழை இல்லாததால் சென்னைக்கு குடிநீர் தரும் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு போய்விட்டது. நிலத்தடி நீரும் பெருமளவு குறைந்துவிட்டதால் சென்னை மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படும் செய்தி உலக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் சென்னையின் தண்ணீர் பஞ்சம் குறித்து செய்திகள் அறிந்த மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல்

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏப் 29 மேலும் வலுப்பெற்று புயலாக மாறுமா…

தமிழகத்தில் கடந்த ஆறு வாரமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சராசரியாக 100 டிகிரி வெயில் என்ற அளவில் தொடங்கி அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்குள் வெயிலின் கொடூர தாக்குதல் தொடங்கிவிட்டது.   இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து வருவதால் தென் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது.   தற்போது வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் மேலும் மேலும் வாசிக்க …..

ஆசியா இயற்கை சுற்றுச்சூழல்

பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயலுக்கு 26 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல்வேறு நகரங்களில் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  மழையுடன் புழுதி புயலும் வீசி வருகிறது.    இதில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன.  பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளன.  இதனால் சாலைகளில் பயணம் செய்வது ஆபத்து நிறைந்த ஒன்றாகி விட்டது. இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  இதனால் 2 பெண்கள் உள்பட 9 பேர் மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல் தமிழ்நாடு

திசை மாறிய கஜா புயல்

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசையில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் – பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது.  மணிக்கு 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்ந்தது. மேலும் வாசிக்க …..