அரசியல் இயற்கை சமூகம் தேசியம் பாஜக விவசாயம்

அமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை.. விவசாயிகள் உறுதி

மத்திய அரசின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரிப்பதாக அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் அணிதிரண்டு போராட்டம் நடத்தி டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். டெல்லி நோக்கி போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை உத்தரப் பிரதேசம், மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை கட்சிகள் தேசியம் பாஜக விவசாயம்

விவசாயிகள் விரோத மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அதிரடி

மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான கொடூரமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, டிசம்பர் 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார திருத்த மசோதா 2020 மற்றும் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களையும் ரத்து செய்திடக் கோரி நவம்பர் மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு பயணம்

சென்னை போக்குவரத்துக்கு காவல்துறையின் வினோத அறிவிப்பால் வெடிக்கும் சர்ச்சை

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற பதாகையை வைக்க வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் ஹெல்மெட் குறித்த பலவேறு விழிப்புணர்வுகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொடர்ந்து ஹெல்மெட் இன்றி சாலைகளில் வலம் வருவோரின் எண்ணிக்கை குறையவே இல்லை. இந்நிலையில், ஹெல்மெட் மற்றும் கார் சீட் பெல்ட் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் இல்லை என்ற வாசகம் அடங்கிய பதாகையை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தேசியம் விவசாயம்

போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு… டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் அமைதியான முறையில் டெல்லி புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பதால், மேலும் வாசிக்க …..

சட்டம் சமூகம் தமிழ்நாடு பெண்கள்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாஜக நிர்வாகி, இன்ஸ்பெக்டர் உட்பட பலர் கைது

சென்னையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரும், வட வடசென்னை வடக்கு மாவட்ட பாஜகவின் செயற்குழு உறுப்பினரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 10 ஆம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கூறி 8 பேர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை மகளிர் மேலும் வாசிக்க …..

அரசியல்

புதிய தொழில்நுட்பத்துடன் கொரோனா கவச உடை; ஆவடி CRPF தலைமை அதிகாரி அசத்தல்

ஆவடியில் செயல்பட்டுவரும் CRPF தலைமை அதிகாரி ஒருவர் புதிய தொழில்நுட்பத்துடன் கொரோனா கவச உடை (PPE kit) வடிவமைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் குறையாமல் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில உள்ளது. இதுவரை 91,77,840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,34,254 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், மேலும் வாசிக்க …..

அரசியல் கேரளா சமூகம் பெண்கள்

கேரளாவில் போலீஸ் சட்டம் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு; நெருக்கடியில் பினராயி விஜயன்

கேரளாவில் கொண்டுவரப்பட்ட போலீஸ் சட்டம் திருத்தம் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் மகளிர், குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதில் இந்த சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்ட திருத்தம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக, போலீஸ் சட்டத்தில் மேலும் வாசிக்க …..

கேரளா சமூகம் பெண்கள் வாழ்வியல்

சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை: கேரள அரசு

பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஓர் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தனநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்கும் உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் பரப்புதல், படங்களை பதிவேற்றம் செய்தல், ஷேர் செய்தல், அல்லது மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

தமிழக அரசு தடை விதித்தாலும், திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறும்- எல்.முருகன் உறுதி

வேல் யாத்திரை நடத்த 2 முறை உயர் நீதிமன்றம் தடை விதித்தும், நவம்பர் 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தமிழகத்தில் யாத்திரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். தமிழக அரசு விதித்த தடையை மீறி, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வேல் யாத்திரையை தொடங்கியது பாஜக. இதனையடுத்து யாத்திரைக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இது வேல் யாத்திரை அல்ல; அரசியல் யாத்திரை. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் சட்டம்

அர்னாப் கோஸ்வாமியை உடனடியாக விடுவிக்க இடைக்கால ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்கிடெக்ட் அன்வய் நாயக் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 2018ம் ஆண்டு ஆர்கிடெக்ட் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டனர். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியை, கடந்த 4ம் தேதி மும்பை காவல்துறை கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்னாப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பின்னர் தலேஜா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மேலும் வாசிக்க …..