அரசியல் உலகம் தேசியம்

ஸ்பைவேர் மூலம் செல்போன்களை ஒட்டு கேட்ட ஒன்றிய பாஜக அரசு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னணி ஊடகவியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவன பெகாஸஸ் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ், கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. பிரபல ஊடக நிறுவனங்கள் மேற்கொண்ட மேலும் வாசிக்க …..

கொரானா தேசியம்

தடுப்பூசி விலையை உயர்த்தி ஒன்றிய மோடி அரசு ஒப்பந்தம்; கோவிஷீல்டு ரூ.215, கோவாக்சின் ரூ.225

இந்தியாவில் தற்போது ரூ.150க்கு வாங்கப்பட்டு வரும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை முறையே ரூ.215, ரூ.225 என்ற அதிக விலைக்கு கொள்முதல் செய்ய ஒன்றிய பாஜக அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை ஒன்றிய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்கள், 45-60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக, மருந்து நிறுவனங்களுடன் 50% தடுப்பூசியை ஒன்றிய மேலும் வாசிக்க …..

கொரானா தேசியம் மருத்துவம்

அக்டோபா்-நவம்பா் மாதங்களில் கொரோனா 3வது அலை உச்சம் அடையும்- எச்சரிக்கும் விஞ்ஞானிகள் குழு

இந்தியாவில் கொரோனா 3வது அலை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சம் பெறலாம், தினசரி பாதிப்புகள் 2 லட்சம் வரை இருக்கலாம் என ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 3,06,19,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

கர்நாடகா, ஹரியானா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. ஒன்றிய பாஜக அரசு கொரோனாவை முறையாகக் கையாளவில்லை என பலரும் விமர்சித்து வந்தனர். கொரோனா ஒருபுறம், விலைவாசி உயர்வு மறுபுறம் என ஒன்றிய பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் அடுத்தாண்டு ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் இமேஜை மேலும் வாசிக்க …..

தமிழ்நாடு தேசியம் விளையாட்டு

மதுரை டூ டோக்கியோ: ஷூ கூட இல்லாமல் பயிற்சி.. ஒலிம்பிக் கனவை அடைந்த மதுரை தமிழச்சி

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார் மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை சர்வதேச ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை ரேவதி (வயது 22) தேர்வு பெற்று உள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் இளம் வயதில் பெற்றவர்களைப் பறிகொடுத்து பாட்டியின் அரவணைப்பில் மேலும் வாசிக்க …..

அரசியல் உலகம் தேசியம் பாஜக

ரஃபேல் போர் விமான ஊழல் விசாரணை தொடங்கிய பிரான்ஸ்; கலக்கத்தில் மோடி அரசு

பிரான்ஸுடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கை விசாரிக்க நீதிபதி ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் (Jean François Ponert) நியமிக்கப்பட்டுள்ளது பாஜக மோடி அரசிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என்ற வீதத்தில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின் 2015 ஆம் ஆண்டு மார்ச் மேலும் வாசிக்க …..

உலகம் கொரானா தேசியம்

ஊழல் குற்றச்சாட்டால் இந்தியாவிடமிருந்து கோவாக்சின் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில் அரசு

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்ததை தற்காலிகமாக ரத்து செய்வதாக பிரேசில் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரேசில் அரசு அனுமதி வழங்கியது. அதன்படி,பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு தடுப்பூசிகளை வாங்கவும் பிரேசில் அரசு முடிவு செய்தது. ஆனால்,பிரேசிலில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 500,000ஐ மேலும் வாசிக்க …..

சட்டம் தேசியம்

ஒன்றிய அரசு- ட்விட்டர் இடையே வெடித்தது மோதல்; ட்விட்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி சைபர் க்ரைம் காவல்துறை போக்ஸோ மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. இது ட்விட்டர் இந்தியா மீது பாயும் 4வது வழக்காகும். இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் ஒன்றிய பாஜக அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களை ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக ஒன்றிய பாஜக அரசு மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு தேசியம்

ஜூலை 31க்குள் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இவற்றை மாற்றி ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற புதிய திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இத்திட்டத்தை எதிர்த்தன. இருப்பினும், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு திமுக தேசியம்

‘ஒன்றிய அரசு’ என்று தான் பயன்படுத்துவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். ஒன்றியம் என்ற ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் கடந்த இரண்டு நாட்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி பல்வேறு முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமானது 23-06-2021 நடைபெற்று மேலும் வாசிக்க …..