உயர் நீதிமன்றம் கல்வி சட்டம் சமூகம் தமிழ்நாடு

மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டிற்கு தடைகோரிய வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடுக்கு தடை கோரிய வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து, தமிழக அரசு 15 நாட்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களை எதிரிகளாக பார்க்க வேண்டாம்- உயர்நீதிமன்றம்

அரசு பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பார்க்க வேண்டுமே தவிர எதிரியாக பார்க்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 7.5% இட ஒதுக்கீடு வழக்கில் இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன் முலம் இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 405 அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில், மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

நிவர் புயல் எதிரொலி: தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

நிவர் புயல் கனமழை காரணமாக நாளை (நவம்பர் 24) நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டு இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைத்தன. அதில் 399 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து பொது கலந்தாய்வு மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மிகக் குறைவு. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரியில் லட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கட்டணம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படித்து, இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவ்வளவுத் தொகையைக் கட்ட முடியாத மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை வெளியீடு

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டப் பேரவையில் செப்டம்பா் 15-இல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கவில்லை. இதற்கு ஆளுநர் விரைந்து மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம்

உயர்சாதி EWS 10% விரைந்து செயல்படுத்தியது போல் OBC இடஒதுக்கீட்டினை வழங்குக; ஸ்டாலின்

நடப்பாண்டில் 50% ஓபிசி மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இன்று (அக்டோபர் 26) தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்பில் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

பாஜக கல்விப் பிரிவு மாநில செயலாளர் கடிதத்துக்கும், பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை; சொல்கிறார் முருகன்

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா வழங்க கோரிய அரசாணை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க 3 முதல் 4 வாரங்கள் ஆய்வு செய்ய கால அவகாசம் தேவைப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் கல்வி சட்டம்

ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது; உச்ச நீதிமன்றம்

மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கவும், அதை நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தவும் கோரிய மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழக அரசால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை இறுதி செய்து அடுத்த மேலும் வாசிக்க …..

அரசியல் கல்வி தமிழ்நாடு

மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக; போராட்டத்தை முன்னெடுக்கும் திமுக

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுக அரசுக்கு எதிராக திமுக நாளை (அக்டோபர் 24) கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக குற்றம் சாட்டி, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம்

ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது – மத்திய அரசு திட்டவட்டம்

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து 15% இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன. இந்நிலையில், இந்த இடங்களில் 50% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, மேலும் வாசிக்க …..