கல்வி சமூகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை வெளியீடு

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டப் பேரவையில் செப்டம்பா் 15-இல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கவில்லை. இதற்கு ஆளுநர் விரைந்து மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

பாஜக கல்விப் பிரிவு மாநில செயலாளர் கடிதத்துக்கும், பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை; சொல்கிறார் முருகன்

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா வழங்க கோரிய அரசாணை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க 3 முதல் 4 வாரங்கள் ஆய்வு செய்ய கால அவகாசம் தேவைப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் மேலும் வாசிக்க …..

அரசியல் கல்வி தமிழ்நாடு

மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக; போராட்டத்தை முன்னெடுக்கும் திமுக

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுக அரசுக்கு எதிராக திமுக நாளை (அக்டோபர் 24) கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக குற்றம் சாட்டி, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம்

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- தமிழக அரசு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கட்டுள்ளது. தமிழகத்திலும் பேருந்து, ரயில் உட்பட பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனிடையே அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா கால விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தமிழக அரசின் பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஆளுநர் பன்வாரிலால் மேலும் வாசிக்க …..

அரசியல்

இளையராஜா இசை நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கும் தமிழக ஆளுநர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் “இளையராஜா 75” இசை நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். இசைஞானி இளையராஜா இந்த ஆண்டு தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இளையராஜாவை பெருமைப்படுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 நிகழ்ச்சி, பிப்ரவரி 2, 3ம் தேதிகளில் நடக்கிறது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பங்கேற்கின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் மேலும் வாசிக்க …..