நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கட்டுள்ளது.

தமிழகத்திலும் பேருந்து, ரயில் உட்பட பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனிடையே அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா கால விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தமிழக அரசின் பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி,

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிக்காமல் இருந்தால் ரூ.500 அபராதம்.

கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ.500 அபராதம்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத உடற்பயிற்சி நிலையங்கள், சலூன், ஸ்பா ஆகியவற்றிற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் 4.5 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு; உயிரிழப்பு 7,608 ஆக உயர்வு