அரசியல் உச்ச நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீட்டிப்பு; உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைக்கைதி பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் பேரறிவாளனை விடுவிக்க வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனை விடுதலை செய்ய பல்வேறு அரசியல் கட்சிகள், மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

பேரறிவாளன் விடுதலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை; உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை, இதுகுறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஏழு பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி பல அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதில் முக்கியமாக, பேரறிவாளனை விடுவிக்க வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் சட்டம் தேசியம்

எனது பதிவுகளைத் திரும்பப் பெறவோ, மன்னிப்பு கேட்கவோ மாட்டேன்- நடிகர் குணால் கம்ரா

தனது கருத்துகளைத் திரும்பப் பெறவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ விரும்பவில்லை என உச்சநீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக நடிகர் குணால் கம்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் நாயக்கை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரும், 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் அலிபாக் செசன்ஸ் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் சட்டம்

அர்னாப் கோஸ்வாமியை உடனடியாக விடுவிக்க இடைக்கால ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்கிடெக்ட் அன்வய் நாயக் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 2018ம் ஆண்டு ஆர்கிடெக்ட் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டனர். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியை, கடந்த 4ம் தேதி மும்பை காவல்துறை கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்னாப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பின்னர் தலேஜா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் கட்சிகள் காங்கிரஸ் சட்டம்

ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளரை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தை நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இரு நாட்கள் இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் கடந்த 30 ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. இதனை மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் சட்டம்

டிஆர்பி மோசடி: ரிபப்ளிக் சேனல் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்

டிஆர்பி மோசடி விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றம் சரியாக செயல்படுவதாக கூறி, ரிபப்ளிக் சேனல் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், மராத்தியைச் சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டுப் பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதற்காக பிஏஆர்சி நிறுவனம் போலீஸில் புகார் அளித்தது. இதையடுத்து, விசாரணை நடத்திய மும்பை போலீஸார் 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு

இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள், வேறு வீடு வைத்திருந்தால் பட்டா ரத்து : நீதிமன்றம்

இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள், வேறு வீடு வைத்திருந்தால் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   ஒருவேளை இலவச இடத்தில் வீடு கட்டியிருந்தால் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்கலாம் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது .   மேலும் வேறு ஏதேனும் இடங்கள் அல்லது வீடு இருந்தால் அரசு சார்பில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.   சிவகங்கையை சேர்ந்த சக்திவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவை மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் கலாச்சாரம் பெண்கள் வடமாநிலம் வாழ்வியல்

ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை நடக்கவே இல்லை என உபி அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் கொடூரமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான  வழக்கின் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறும் உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.   அப்பெண்ணின் உடலை உறவினர்கள்  கூட இல்லாமல் மாநில காவல் துறையினர் அவசர அவசரமாக நள்ளிரவில் எரியூட்டினர்   இச்சம்பவத்துக்குக் மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

மாதத்தவணையை ஒத்திவைக்கும் வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்தி வைப்பு

கடன் சீரமைப்பு தொடர்பாக, கே.வி.காமத் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தாக்கல் செய்யும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கடன்களுக்கான, இ.எம்.ஐ., எனப்படும் மாதத் தவணையை ஒத்திவைக்கும் வழக்கின் விசாரணை, மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகள், அறிவிப்புகளை வெளியிட்டது. ‘கடன்களுக்கான, இ.எம்.ஐ.,யை ஒத்திவைக்கலாம்’ என, அதில் குறிப்பிடப்பட்டது. அதன்படி, இந்தாண்டு, மார்ச் முதல், ஆக., வரையிலான, ஆறுமாதங்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் சட்டம்

நீட் தேர்வு விவகாரம்.. 6 மாநில அரசுகளின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாது என, நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 6 மாநில அரசுகள் தொடர்ந்த சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா அதிகரித்து வரும் இந்த சூழலில், நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 வரையும் நடக்கும் என்று தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல், வெள்ள பாதிப்பு என பல்வேறு பாதிப்புகளுக்கு இடையே நீட் மற்றும் ஜேஇஇ மேலும் வாசிக்க …..