அமெரிக்கா அரசியல் உலகம் தேசியம் பாஜக விளையாட்டு

மோடி, அமித்ஷாவை விமர்சித்த டென்னிஸ் வீராங்கனை- பாஜகவினர் கதறல்

பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை விமர்சித்து அமெரிக்க முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்டினா வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி குறித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைக்காட்சி ஒன்றியில் பேசியிருந்தார். அமித்ஷா தனது பேட்டியில், “எங்களைச் சிலர் சர்வாதிகாரி என கூறிவருகிறார்கள். மோடி போன்று கருத்துகளுக்குக் காது கொடுப்பவரை நான் பார்த்ததில்லை. அனைவரது கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப்பார். ஒரு விஷயத்தில் இவ்வளவு யோசிக்க என்ன இருக்கிறது மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம் தொழில்நுட்பம்

சுமார் 6 மணி நேர முடக்கம்- 52,000 கோடியை இழந்த மார்க் சக்கர்பெர்க்!

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் சுமார் 6 மணி நேரம் முடங்கியதால், மார்க் சக்கர்பெர்க்கிற்கு ரூ.52,000 கோடி இழப்பு ஏற்பட்டு உலக பணக்காரர்கள் பட்டியலில், 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் திடீரென நேற்றிரவு (04-10-2021) முடங்கியது. இதனால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவை முடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். ஏதோ ஒரு தவறு நடந்துள்ளது. மேலும் வாசிக்க …..

அமெரிக்கா அரசியல் உலகம் தேசியம் பாஜக

‘உலகின் கடைசி, சிறந்த நம்பிக்கை’ மோடி: ஃபோட்டோஷாப் என அம்பலப்படுத்திய ஆங்கில நாளிதழ்

பிரதமர் மோடியின் புகைப்படத்துடன், ‘உலகின் கடைசி, சிறந்த நம்பிக்கை’ என்ற தலைப்பில் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் செய்தி வெளியானதாக பரவும் புகைப்படம் போலியானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் மோடி, குவாட் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அமெரிக்கா சென்றார். ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கடந்த 27 ஆம் தேதி இந்தியா திரும்பினார். மோடியின் அமெரிக்கப் பயணங்கள் குறித்து அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் மேலும் வாசிக்க …..

அமெரிக்கா இயற்கை உலகம்

அமெரிக்காவை சூறையாடிய இடா புயல்- நியூயார்க், நியூ ஜெர்சியில் அவசரநிலை

அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப் போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கன மழைக்கு இதுவரை 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூயிசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம்

வெளியேறிய அமெரிக்க ராணுவம்; ஆப்கானுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் அறிவிப்பு

அமெரிக்காவின் கடைசி விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதும் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆப்கானுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என அறிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளிேயறத் தொடங்கியதையடுத்து, தலிபான்கள் பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த இரு மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம்

காபூல் தாக்குதலில் ஈடுபட்டவர்களை நாங்கள் வேட்டையாடுவோம்: ஜோ பைடன் கடும் எச்சரிக்கை

காபூல் வெடிகுண்டு சம்பவத்தை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நாங்கள் வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக பேசியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து, தலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் விமான நிலையத்தைச் சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்கானை தலிபான்கள் மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம் தேசியம்

காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு; பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் அருகே நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளநிலையில், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளநிலையில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல்வேறு நாடுகளும் ஆப்கனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள், தங்களுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர், அந்நாட்டின் பொதுமக்கள் எனப் பலரையும் மீட்டு வருகின்றனர். ஆப்கனில் கடந்த 15 ஆம் தேதி தலிபான்கள் ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம்

டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுகிறது- பேஸ்புக் திடீர் அறிவிப்பு

டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி மாதம் வரை 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசி, மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம் கொரானா

அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி: FDA அனுமதி

அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த உணவு மற்றும் மருந்து கழகம் (Food and Drug Administration- FDA) அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.96 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனையடுத்து அங்கு பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மேலும் வாசிக்க …..

அமெரிக்கா அறிவியல் உலகம் தொழில்நுட்பம் விண்வெளி

தரையிறங்கிய சில வினாடிகளில் வெடித்து சிதறிய ‘ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்’ ராக்கெட்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார் ஷிப்’ ராக்கெட் சோதனையை நிறைவு செய்த சில நொடிகளில் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அடுத்த தலைமுறை ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை தயாரித்து சோதனை செய்து வருகிறது. அந்தவகையில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கக்கூடிய ‘ஸ்டார் ஷிப்’ விண்கலத்தின் முன்மாதிரி நேற்று (மார்ச் 03) அறிமுகம் செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா மேலும் வாசிக்க …..