ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் அருகே நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளநிலையில், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளநிலையில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல்வேறு நாடுகளும் ஆப்கனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள், தங்களுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர், அந்நாட்டின் பொதுமக்கள் எனப் பலரையும் மீட்டு வருகின்றனர்.

ஆப்கனில் கடந்த 15 ஆம் தேதி தலிபான்கள் ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனைத்தொடர்ந்து காபூல் விமானநிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் எச்சரிக்கை விடுத்திருந்தன.

இந்தத் தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினர் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், விமானநிலையத்தில் அபே கேட், கிழக்கு கேட், வடக்கு கேட் உள்ளிட்டப் பகுதிகளில் குழுமியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26) இரவு இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பிரதான அபே கேட்டில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர்.

[su_image_carousel source=”media: 25950,25953,25951″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இந்த தாக்குதலில் அமெரிக்கப் படைவீரர்கள் 13 பேர் உட்பட 72 பேர் பலியானதாகவும், 120 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் குழந்தைகள் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் காரோஷன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எனவே இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலையத்தில் நடந்த இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

“இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு புகலிடங்களை வழங்குவோருக்கு எதிராகவும் உலக நாடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதை இந்த தாக்குதல்கள் வலியுறுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளது.

ஆப்கன் மக்களை புறக்கணிக்கக்கூடாது: உலக நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்!