ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.
இயற்கை வணிகம்

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான அலுவலக பணிகளை மேற்கொள்ள அனுமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான அலுவலக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் செல்லாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததையடுத்து ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதால், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய குழு அமைக்க வேண்டும் என்றும் மேலும் வாசிக்க …..

அரசியல்

அதிமுக அரசின் நோக்கத்தை தவிடுபொடியாக்கிய திமுக வக்கீல் குழு

திமுக தலைவர் கருணாநிதி செவ்வாயான்று காலமானார். அவரது உடலை சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடத்திற்கு பின்னால் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் அதிமுக அரசின் நிலைபாடு குழப்பம் தருவதாக விசாரனையை பார்வையிட்டவர்கள் தெரிவித்தனர்.இதன் விவரம் இதோ: அதிமுக அரசு வக்கீல் : திடீரென்று 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது துரதிருஷ்டவசமானது. நீதிபதி : வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. மெரினாவில் அடக்கம் மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள்

கருணாநிதி போல ராஜதந்திரியை இனி பார்க்க முடியாது சோனியா காந்தி உருக்கம்

தனக்கு தந்தையை போன்ற கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் தனக்கு பேரிழப்பு என்று சோனியா காந்தி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் சர்வதேச அரசியல் மற்றும் மக்கள் சேவையின் முகமாக திகழ்ந்தவர் கருணாநிதி. தனது வாழ்க்கையை சமூக நீதிக்காகவே அர்ப்பணித்தவர் திமுக தலைவர் கருணாநிதி. சமூக நீதி, சமத்துவம், வளர்ச்சி ஆகியவற்றிற்காக மேலும் வாசிக்க …..

கருத்துக்கள் பெண்கள்

திமுக தலைவர் இறுதி சடங்கில் அனைவரையும் கவர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ்

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்குகள் மெரினா கடற்கரை அண்ணா சமாதியில் வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு, அங்கும் இங்கும் துரிதமாக நடந்து அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து கொண்டிருந்தார். அவரை தொலைக்காட்சி நேரலையில் பார்த்த பலரின் மனதிலும், யார் இந்தப் பெண் என்ற கேள்வி கேட்ட வண்ணம் இருந்தனர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படும் நிகழ்வில், அங்குள்ள பலரின் கவனத்தை ஈர்த்தவர் இவர். எந்த சிக்கல் இல்லமாலும், முறையாக நடந்ததற்கும் பின்னால் இருந்து பணி புரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மேலும் வாசிக்க …..

சமூகம்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது

திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார். இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி மேலும் வாசிக்க …..

கேளிக்கை

ஸ்ரீரெட்டியின் பரபரப்புகள்.. சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும்..

கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகை சேர்ந்தவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் ஸ்ரீரெட்டி. இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியுமான பிருத்விராஜ் மீது பாலியல் புகார் சாட்டியுள்ளார். மேலும் அவர் தன் பதிவில், ‘காமெடி பிருத்வி.. ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் ரோடு 10-ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் அமெரிக்காவிற்கு கலை நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிகைகளிடம் மேலும் வாசிக்க …..

சமூகம்

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உற்சவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உத்தரவு

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் உள்ள நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் காணாமல் போனதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் முகாந்திரமில்லை என்று கூறி காவல்துறை விசாரணைக்கு ஏற்க மறுத்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டதாக 2017ஆம் ஆண்டு அக்டோபரில் கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தி மேலும் வாசிக்க …..

கேளிக்கை

கலைஞர் கருணாநிதி மறைவிற்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி

திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி மறைவிற்கு நடிகர்கள், நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். தமிழ் நடிகர்களுள், ரஜினிகாந்த், கமல்ஹாஸன், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் வர இயலாததால், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது மனைவி ஷோபா வந்து அஞ்சலி செலுத்தினர். சில நாட்களுக்கு முன்பு கலைஞர், காவேரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற போது நடிகர் விஜய் அங்கு மேலும் வாசிக்க …..

அறிவியல்

பூமியை தாக்கும் சூரியக் காற்று பற்றி அறிய புதிய விண்கலம் நாசா முயற்சி

பூமியை போன்று மனிதன் வாழ்வதற்கு தகுதியுள்ள மற்ற கிரகங்களை ஆய்வுச் செய்யும் பணியில் அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி கழகம், இந்தியாவின் இஸ்ரோ போன்ற பல்வேறு விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால், சூரிய மண்டலத்திலுள்ள அத்தனை கோள்களும் சுற்றி வரும் சூரியனை அதனுடைய உட்சபட்ச வெப்பநிலையின் காரணமாக எவராலும் இதுவரை நெருங்க முடியவில்லை. இந்நிலையில், சுமார் 1,377 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் சூரியனின் சுற்றுப்பாதையை மணிக்கு 7,00,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வந்து மேலும் வாசிக்க …..

கேளிக்கை

எந்திரன் கதை புது பிரச்னை நீதிமன்றத்தில் ஷங்கர் மனு

‘எந்திரன்’ பட கதை விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’. இந்தப் படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடான் கூறிவந்தார். இந்நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடான் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் எந்திரன். மேலும் வாசிக்க …..