பிரபல டிவி New7tamil சானல் மற்றும் நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்டு வி.வி.மினரல்ஸ் எனும் தாது மணல் வியாபாரம் செய்து வருகிறார் தொழிலதிபர் வைகுண்டராஜன்,
கடந்த 5 நாட்களாக வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற வருமானவரிச் சோதனை மூலம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு செய்தது வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், வைகுரண்டராஜனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், அவரது மகன் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 98 இடங்களில் வருமானவரித்துறை கடந்த 25-ஆம் தேதி முதல் தொடர் சோதனை நடத்தி வந்தது.
இதையடுத்து ரூ.800 கோடி வரி ஏய்ப்பு செய்தது மட்டுமல்லாமல் ரூ.1,800 கோடி முதல் ரூ.2,500 கோடி வரை கணக்கில் வராத சொத்துக்கள், வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மூலம் முதலீடு உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
தொடர்பு செய்திகள் : வைகுண்டராஜன் வங்கி கணக்குகள் முடக்கமா.. 5வது நாளாக தொடரும் ரைய்டு<