சென்னையில் 10க்கும் மேற்பட்ட போலி BPO நிறுவனங்களை தொடங்கி தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய கும்பல் கடந்த பிப்ரவரி 14ம் தேதி போலீசாரிடம் சிக்கியது. 
 
மேலும் 300க்கும் மேற்பட்ட டெலிகாலர்ஸ் மூலம் குறைந்த வட்டிக்கு வங்கி கடன் என ஏமாற்றி மோசடியில் ஈடுப்பட்ட அந்த கும்பலின் கோபிகிருஷ்ணன் உட்பட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
251 ரூபாய்க்கு போன் என்று பாஜக தலைவரும்  முன்னாள் மந்திரி  முரளிமனோகர் ஜோஷியால் கைகளால்  தொடங்கி வைத்து அயிரம் கோடிகளுக்கு மேல சுருட்டிய கும்பல் போலவே இந்த குறைந்த வட்டி கடன் என இந்த கும்பலும் நூதனமாக கோடிகளில்  சுருட்டி உள்ளதை கண்டு தமிழக போலிசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனராம் 

 

இந்த நிலையில் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வங்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்திய கே.கே.நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவரும்  தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

மேலும் பொது மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க பயன்படுத்திய நூதன தொழில்நுட்ப முறைகள் போலீசாரை திடுக்கிட வைத்துள்ளது. 

குறைந்த வட்டிக்கு தனி நபர் கடன் கோரும் அப்பாவி மக்களிடம் இந்த கும்பல் வழக்கமான ஆவணங்களான ஆதார் அட்டை நகல், பான் கார்ட் நகல் மற்றும் டெபிட் கார்ட் நகலையும் வாங்கியுள்ளது. 

பின்னர் கடன் பெற வங்கி கணக்கில் ரூ. 50,000 முதல் ரூ. 1,00,000 லட்சம் ரூபாய் வரை குறைந்த பட்சம் இருப்புத் தொகை இருக்க வேண்டும் என இந்த கும்பல் கூறியுள்ளது. 

அவர்கள் கணக்கில் பணம் ஏறியதும் கடன் தொகை அங்கீகரிக்கப்பட்டதாக கூறி செல்போனுக்கு வரும் OTP நம்பரை  கேட்டு பணத்தை சுருட்டியுள்ளது இந்த கும்பல்.

இதில் கொடுமை என்னவென்றால்  ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மணிகண்டனுக்கு 20% விழுக்காடு கமிசன் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. 

மற்றும் இன்ஃபோஸி இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் போலியானா நிறுவனம் தொடங்கி  அந்த நிறுவனத்தின் கணக்கில் வாடிக்கையாளரிடம் இருந்து சுருட்டிய பணத்தை போட்டு வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது மட்டுமின்றி மேலும் பல பெயர்களில் ஏராளமான போலி நிறுவனங்களை ஒரே முகவரியில் தொடங்கி அவற்றின் வங்கி கணக்கிலும் பணத்தை முதலீடு செய்தது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இத்தனை போலி நிறுவனங்களுக்கும் ஒரே முகவரியில் வங்கி கணக்கு துவங்க KYC சான்றிதழ் வழங்கிய வங்கிகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.