வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுக்களாகப் பிரிந்து மேற்கொண்ட சோதனை நேற்று முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது

நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது வி.வி.மினரல்ஸ் நிறுவனம். இதன் உரிமையாளர் வைகுண்டராஜன். இவரின் டிவி தான் பிரபல news7tamil சானல் இவர் மற்றும் இவரின் சகோதரர்கள் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் மணலை அள்ளி, அதிலிருந்து தாதுக்களைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.

இந்த ஆலைகளால் கடலோரப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு பல நோய்கள் பரவுதல், குடிநீர் உவர்ப்பாக மாறுதால் உள்ளிட்ட பல புகார்களை முன்வைத்து மக்கள் அளித்த புகாரால் மத்திய அரசு சுற்றுபுற சூழல் நெருக்கடி காரணமாக வேறு வழியில்லாமல் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா தடை விதித்தார்.

அதன் பின்னர், வி.வி.மினரல்ஸ் நிறுவனம் கம்பி, பெயின்ட் உற்பத்தி, உட்பட வேறுபல தொழில்களிலும் இறங்கியுள்ளது. இந்த நிலையில், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை எழும்பூர், திருவான்மியூர் உட்பட்ட இடங்களிலும், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ள அலுவலகங்கள், வணிகவளாகங்கள், வைகுண்டராஜன் மற்றும் அவர் மகன்களின் வீடுகள், அலுவலகங்கள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கினர்.

தூத்துக்குடியைப் பொறுத்தவரையில் சிப்காட் பகுதியில் உள்ள வி.வி.டைட்டானியம், முத்தையாபுரத்தில் உள்ள குடோன், பழையகாயல் பகுதியில் உள்ள வி.வி.பெயின்ட் கம்பெனி உள்ளிட்ட கம்பெனிகள், நிர்வாக அலுவலகம் மற்றும் குடோன்கள் என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையைத் தொடங்கினர்

காலை 6.30 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நிலையில் இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் நாளையும் ரெய்டு தொடரலாம் எனவும் கூறப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரிமான வரி செலுத்தாததும், கணக்கில் காட்டப்படாத அளவுக்கு வருமானம் குவித்துள்ளது ஆகியவை காரணமாகச் சொல்லப்பட்டாலும், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு மறைமுக ஆதரவாகச் செயல்பட்டு வந்த வைகுண்டராஜன், அ.தி.மு.க வெற்றி பெற்ற பிறகு, சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராகச் செயல்படத் தொடங்கினாராம்.

ஆர்.கே.நகர் தேர்தலின்போதுகூட தினகரனுக்கு பலவழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கினார். ஓ.பி.எஸ்-ஸை தினகரனுடன் சந்திக்க ஏற்பாடு செய்ததிலும் வைகுண்டராஜனுக்கு முழுப் பங்கு உண்டு. இவர் தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதால், 18 எம்.எல்.ஏ-க்களின் தீர்ப்புவரும் நாளில் இந்த வருமான வரிச்சோதனையைச் செய்தால் தினகரனுக்கும் வைகுண்டராஜனுக்கும் ஒரு ஷாக் ட்ரீட்மென்ட்டாக இருக்கும் என்ற விதத்திலும்கூட இந்த வருமான வரிச்சோதனையை நடத்தியிருக்கலாம்” என்றனர்.

இதனால் எடப்பாடி பன்னிர் செல்வ்வம் தரப்பு ஏகப்பட்ட குஷியில் உள்ளனராம்