வன்முறையையும் தூண்டும் வகையில் உரை நிகழ்த்தியதால், ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி எனும் பெயரில் மதம் மாறிய ஷியா வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரான வாசிம் ரிஸ்வி மீது உத்தராகண்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் ஷியா வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரான வசீம் ரிஜ்வீ, முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தவர். இந்நிலையில் வாசிம் ரிஸ்வி கடந்த 6.12.2021 அன்று உத்திரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத் மடத்தில் இந்துவாக மதம் மாறி தன் பெயரை ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி என மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில், ஹரித்துவாரின் தரம் சன்சத் எனும் சாதுக்கள் சபை கூட்டத்தில் தியாகி நேற்று (23.12.2021) உரையாற்றினார். ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகியின் அந்த பேச்சு வன்முறையை தூண்டுவதாதகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் இருந்தது சர்ச்சையானது.

இதனையடுத்து ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகியின் சர்ச்சை வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலானது. இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் காவல்துறையினர் நாராயண்சிங் தியாகி மீது வன்முறை தூண்டும் பிரிவின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஹரித்துவார் காவல்துறையினர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் தரம் சன்சத் சபையில் நாராயண்சிங் தியாகி உரையாற்றினார். இதனால், அவர் மீது ஐபிசி 153 ஏ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவாகி விசாரணை துவங்கி உள்ளது”’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே நாராயண் தியாகியை கண்டித்து, அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பியுமான அசதுத்தீன் ஒவைசியும் அறிக்கை வெளியிட்டு, தியாகி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் தனது கட்சியின் உத்தராகண்ட் மாநிலத் தலைவருக்கு அறிவுறுத்தி உள்ளார்.