தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் வேலையில் மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்படுவதை உறுதிசெய்யும் வகையில் நாள்தோறும் வங்கிகள் மூலமும் , காவல்துறை மூலமும் மற்றும் ரயில்வே துறை மூலமும்  தமிழக மக்கள் தெரியாத ஹிந்தியை திணிக்கும் வேலையில் மோடியின் மத்திய அரசு இறங்கி இருப்பதற்க்கான தொடர்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இது சம்பந்தமாக தனது 10 லட்சம் வாசகர்களுக்கு ஆதாரத்தை அடுக்குகிறது தமிழ் ஸ்பெல்கோ
 
ஆதாரம் 1 :
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
[su_spacer]
[su_spacer]
ஆதாரம் 2 :

தமிழக கடலூர் மாவட்ட காவல்துறையிலே இந்தியில் ஓப்புதல் (ரிசிப்பிட்) தரப்படுகிறது .

[su_spacer]
[su_spacer]
ஆதாரம் 3 :
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என சட்டமன்றத்தில் தமிழகத்தின் அம்மா வழியில் நடக்கும் அதிமுக  அரசு உறுதி அளித்துள்ள நிலையில் .. வங்கி படிவங்கள் ஹிந்தியில் இருப்பதால் அதை புரியாத தமிழக மக்கள் பெரும் இன்னல்களுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர் 

 

[su_spacer]

[su_image_carousel source=”media: 17570,17569,17568″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

[su_spacer]

ஆதாரம் 4 :
இதைத் தொடர்ந்து, தற்போது உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் இந்தியன் வங்கி ஏ.டி.எம் ரசீதில் ஆங்கிலம் இந்தி மொழி இடம்பெற்றிருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் திருநாவலூர், கெடிலம், சேந்தமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தமிழ் மொழி மட்டுமே அறிந்த வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

[su_spacer]

[su_spacer]

இந்த வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் இருந்து வந்த ரசீதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பதிவுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் குழப்பமும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதுகுறித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.வெங்கடேசன் கூறும்போது, “இந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக கிராமப்புற ஏழை எளிய மக்கள்தான் உள்ளனர்.
 
இந்த வங்கி ஏ.டி.எம்மில் கடந்த இரண்டு நாள்களாக வரும் ரசீதுகளில் தமிழ் எழுத்து இல்லை. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள்தான் இடம்பெற்றுள்ளன.
 
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என சட்டமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

 

ஆனால் தற்போது ஏ.டி.எம் மையத்தில் வரும் ரசீதில் கூட தமிழ் எழுத்து இல்லை. இதில் தொடர்புடைய வங்கி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
 
ஆதாரம் 5 :
சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியில் இந்தி தெரியாததால் கடன் மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அந்த சமூக வலைதளத்தில் பெரும் பிரசனை வெடித்தால் பயந்து போன வங்கி அந்த அதிகாரியை திருச்சிக்கு இடம் மாற்றியது அனைவரும் அறிந்ததே
 
10 ஆம் நூற்றாண்டியில் உருவான ஹிந்தி வாசனையே அறியாத தெரியாத 4500 ஆண்டும் முன் உருவான தமிழ் பேசும் தமிழக மக்கள் மீது இது பரவலாக இந்தியை திணிக்கும் முயற்சியாகவே இத்தகைய தொடர் செயல்கள் தமிழக மக்களால் பார்க்கப்படுகிறது.