அமெரிக்காவின் அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க கண்டத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது அலாஸ்கா தீபகற்பம். அலாஸ்காவில் இன்று காலை 7.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . ஜிஎம்டி. நேரப்படி 6.12-க்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், தெற்கு நகரமான சிக்னிக்கில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்க தேசிய டி-சுனாமி எச்சரிக்கை மையம் அலாஸ்கா கடற்கரையின் தெற்குப்பகுதி, அலெயுடியன் தீவுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் சில இடங்களில் பாதுகாப்பு கருதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன்.. மம்தா அதிரடி