காலியாக உள்ள 96 தென்னக ரயில்வே பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 91 வட இந்தியர்கள், 5 பேர் மட்டுமே தமிழர்கள், இது தென்னக ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுவதாக மதுரை எம்பி வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டியின் பாதுகாவலர் பதவிக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் (13.06.2020) வெளியாகியுள்ளன. சுமார் 5,000 பேர் கலந்துகொண்ட இத்தேர்வில், 96 பேர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 5 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 91 பேரும் வட இந்தியர்கள். தேர்வு எழுதியவர்களில் சுமார் 3,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அதில் வெறும் 5 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கெனவே தென்னக ரயில்வேயில் தமிழர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் இது, தென்னக ரயில்வேவின் தமிழர் விரோதப் போக்கின் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது” என்று வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: பிரபல பாலிவுட் நடிகர் தற்கொலை… மன அழுத்தம் காரணமா..