இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் இன்றைய (வெள்ளிக்கிழமை) 6-ஆவது நாளில் முடிவில் இந்தியா பதக்கப்பட்டியலில் 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தில் உள்ளது.

இன்று பெற்ற பதக்கம் விவரம் வருமாறு :

ஆடவர் 4 பேரில் இந்திய வீரர்கள் சவர்ன் சிங், தத்து போகனல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா – திவிஜ் சரண் இணை கஜகஸ்தான் இணையை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

துடுப்புப் படகு பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம்

ஆடவர் இலகுரக ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆடவர் இலகுரக இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோஹித் குமார், பகவான் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஈரானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 24-27 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் தான் கிடைத்தது.