யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரும் அளவுக்கு தாம் என்ன தீவிரவாதியா என்று தமிழக போலீசுக்கு மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிபதி கூறிய பிறகும் கூட தமக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூரில் இருந்து அழைத்துவரப்பட்ட தம்மை சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்காமல் சித்ரவதை செய்வதா என்றும் திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் சிறையில் இருந்து சென்னை ஆலந்தூர் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட போது அவர் பேட்டியளித்துள்ளார்.

தனிமைச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்த தாம் என்ன தீவிரவாதியா எனவும் திருமுருகன் வேதனையடைந்துள்ளார். உறவினர்கள் கூட தம்மை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று திருமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியாத போலீஸின் நேர்மையை பார்த்து உலகம் சிரிக்கிறது என்று திருமுருகன் கூறியுள்ளது. மோடி அரசை பற்றி விமர்சித்தால் தீவிரவாதிகள் போல் வழக்கு போடுவதா என்று திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.