இந்தியா டெக்னிக்கல் ரிஷசன் எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலையில் நுழைந்துவிட்டது என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுக்க பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்தியாவின் பொருளாதரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது.

பல்வேறு பொருளாதார வல்லுநர்கள், நிபுணர்கள், ஆர்பிஐ அமைப்பின் துணை ஆளுநர் மைக்கல் பத்ரா அடங்கிய குழுவின் கூற்றுப்படி, 2020-21 நிதி ஆண்டில் இந்தியா அதிகாரபூர்வமாக டெக்னிக்கல் ரிஷசன் எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலையில் நுழைந்துள்ளது என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் 2020-21 முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 23.9% ஆக சரிந்துள்ளது. இந்நிலையில் வருகிற காலாண்டிலும் இந்தியாவின் ஜிடிபி மிக மோசமாக சரியும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது.

இதனால் இந்தியாவின் நிதி நிலைமை, வேலைவாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது. அதோடு இந்த காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி பொருளாதாரம் 8.6% சரிய வாய்ப்புள்ளது. கடந்த காலாண்டின் சரிவு 23.9% ஆக உள்ள நிலையில், இந்த காலாண்டில் இது மேலும் சரிய உள்ளது.

இந்தியா முதல் முறை இப்படி ஒரு பொருளாதார சரிவை சந்திக்கிறது என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் வரும் நாட்களில் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “வரலாற்றில் முதல்முறையாக இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்களால் நாட்டின் பலத்தைக் கூட பலகீனமாக மாற்றியுள்ளார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பக்ரீத்துக்கு ஆடு வெட்டலைன்னா, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலை- பாஜக எம்பி சர்ச்சை