பாஜகவின் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி எதிர்ப்பு தெரிவித்ததால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய புத்தகம் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராயின் படைப்புகள் உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பாடதிட்டமாக வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அருந்ததிராய், தலைமறைவாக உள்ள மவோயிஸ்ட்டுகளுடன் நடத்திய உரையாடலை Walking with the Comrades என்று எழுதி 2011ம் ஆண்டு நூலாக வெளியானது. இந்த நூல், மாவோயிஸ்ட்களை வேறு ஒரு கோணத்தில் படம்பிடித்து காட்டியது.

அருந்ததிராய் எழுதிய Walking with the Comrades (தோழர்களுடன் ஒரு பயணம்) என்ற இந்த நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.ஆங்கிலம் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், பாஜகவின் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் அருந்ததிராய் மாவோயிஸ்ட்கள் பற்றி எழுதிய Walking with the Comrades நூலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து பல்கலைக்கழகக் குழு பரிந்துரையின்படி, அருந்ததிராய் எழுதிய Walking with the Comrades நூலை பாடதிட்டத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது பல்கலைக்கழகம்.

அருந்ததிராயின் நூல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு, கல்வியாளர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், “ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் எம்பி. சு.வெங்கடேசன், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் பாடத்தில் இருந்து அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அர்னாப் கோஸ்வாமியை உடனடியாக விடுவிக்க இடைக்கால ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு