தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பாஜக தலைவர்கள், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- அதில் 2019 அயோத்தி தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஒருவரும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.அப்துல் நசீர் ஆந்திரா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
- மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
- ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.
- அருணாச்சலப் பிரதேசம் மாநில ஆளுநராக திரிவிக்ராம் பர்னாயக் நியமனம்.
- சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யா நியமனம்.
- இமாச்சலப்பிரதேச ஆளுநராக பிரதாப் சுக்லா நியமனம்.
- அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா நியமனம்.
- சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன் நியமனம்.
- மணிப்பூர் மாநில ஆளுநராக அனுசுயா நியமனம்.
- மேகாலயா மாநில ஆளுநராக பகு சவுகான் நியமனம்.
- பீகார் மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் நியமனம்.
- மகாராஷ்டிரா மாநில ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமனம்.
- லடாக் மாநில ஆளுநராக மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆளுநர்கள் நியமனம் அரசியல் நியமனமாக மாறியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் ஆளும் பாஜக அரசை குற்றம் சாட்டியுள்ளனர்.