தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 3940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 உயர்ந்து உள்ளது.
இதில் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,762 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1443 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45,537 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 35,656 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் மட்டும் 21,094 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று விழுப்புரத்தில் 18 மாத குழந்தை உட்பட மொத்தம் 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1079 பேர் கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றுபவர்களில் 1,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸ் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில உள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது.
போலீசார் பணியாற்ற போதுமான பாதுகாப்பு கவசங்களை அரசு வழங்குவதில்லை எனக் குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் இந்த பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது.
மேலும் வாசிக்க: பால் விற்பனையாளர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த போலீஸ்.. நடந்தது என்ன?