தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில் 53 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள். 54 ஆயிரத்து 490 அங்கன்வாடி மையங்களில் 17 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டை, மசாலா முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

2013-ல் இருந்து முட்டை கொள்முதல் டெண்டர்  மூலம் செய்யப்பட்டு வருகிறது. 58 லட்சம் முட்டை ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் கிறிஸ்டி நிறுவனத்திற்கு டெண்டர் மொத்தமாக தரப்பட்டு சொந்தமாக கோழிப்பண்ணைகள் இல்லாததால் தினமும் 50 லட்சம் முட்டைகளை நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 400 பண்ணையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து சத்துணவு திட்டத்திற்கு வினியோகம் செய்து வந்த நிலையில் ஊழல் காரணமாக ரைடில் சிக்கியது கிறிஸ்டி நிறுவனம் ..இதில் அதிமுக அமைச்சர்கள் , கறுப்பு பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கி விசாரணை நடைபெற்று வருகிற நிலையில் ரூ.220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பதில்மனு தாக்கல் செய்ய 14-ம் தேதி வரை தமிழக அரசு அவகாசம் கேட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் செப்.20-ம் தேதி வரை டெண்டருக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். முன்னதாக சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைக்கான டெண்டரை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோழிப்பண்ணைகள் சார்பில் நேற்று வழக்கு தொடரப்பட்டது.

சத்துணவு திட்ட முட்டை விநியோகத்துக்கான டெண்டர் இன்று முடிவு செய்யப்பட இருந்த நிலையில், 4 கோழிப் பண்ணைகள் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சத்துணவுக்கு முட்டை வழங்கப்படும் டெண்டர் குறித்து இன்று இறுதி முடிவு செய்யப்பட இருந்தது. இந்நிலையில் 4 கோழிப் பண்ணைகள் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சத்துணவு முட்டை விநியோக டெண்டர் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த தடை அதிமுக வட்டாரத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது என அமைச்சருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன