ரபேல் விமானங்களின் விலை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான முக்கிய விவரங்களை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் பிஷாந்த் பூஷண் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 10 நாட்களில் ரபேல் விமானங்கள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், ரபேல் போர் விமான விலை தொடர்பான விவரங்களையும், ஒப்பந்தம் தொடர்பான விவரங்களையும் சீலிட்ட கவரில் 10 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும்.
ரபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட விவரங்களையும் பொது இணைய தளத்தில் வெளியிட வேண்டும். மனுதாரர்களுக்கும் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் ரபேல் விமானங்களின் விலை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான கேட்ட போது அதனை தர ரானுவ மந்திரி மறுத்த நிலையில் இப்போது விவரங்களை வெளியிட உச்ச்நீதிமன்றம் ஆணை மத்திய அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்து உள்ளது