தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளதாக, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், ஜூன் மாதம் 1ம் தேதி துவங்கும் என்று பஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வு இப்போது நடத்துவது சரியான முடிவு கிடையாது என்று பெற்றோர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நலஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் வாசிக்க: தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதி வெளியீடு- பள்ளிக்கல்வித்துறை
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் பழனிசாமியிள் ஒப்புதலுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதன்படி, ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11-ம் வகுப்பு தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
ஜூன் 15: மொழிப்பாடம்
ஜூன் 17: ஆங்கிலம்
ஜூன் 19: கணிதம்
ஜூன் 20: மொழிப்பாடம் (விருப்பத் தேர்வு)
ஜூன் 22: அறிவியல்
ஜூன் 24: சமூக அறிவியல்
ஜூன் 25: தொழில்பாட தேர்வு