நேற்று இரவு சுமார் 7 மணிக்கு எல்ட்மஸ் ரோடு, தேனாம்பேட்டை அருகே நண்பருடன் ஹோட்டல் வாசலில் நின்று பேசி கொண்டு இருந்தேன். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த மூன்று பேர் சென்ட்ரல் ஸ்டேஷன் எப்படி போக வேண்டும் என்று ஹிந்தியில் கேட்டார்கள். அவர்கள் குழி விழுந்த கண்கள், அழுக்கேறிய உடைகள் எல்லாம் அவர்கள் வட இந்தியாவில் இருந்து கட்டிட வேலைக்கு வந்தவர்கள் என்பதை உணர்த்தியது.

நீங்க எந்த ஊரு என்றவுடன் பாட்னா (பீகார்) என்றார்கள். உடனே உங்க மொழி போஜ்புரி பேச வருமா (டெல்லியில் ஒரு வருடம் வேலை செய்த ஹிந்தி தந்த அனுபவத்தை வைத்து “பய்யா அப்கோ துமரா பாஷா போஜ்புரி போல் கார்தே சே”) என்றேன்.

போஜ்புரி மாலும் நஹி என்று முழி முழித்தார்கள். உடனே அருகில் இருந்த ஆட்டோவை அழைத்து இவர்கள் சென்ட்ரல் போக வேண்டும் என்றவுடன் 300 ரூபாய் கேட்டார் ஆட்டோக்காரர்.

அந்த போஜ்புரி மொழியை மறந்த ஹிந்தி பேசும் பீகாரிகள் நூறு ரூபாய் தருகிறோம் என்று கை கூப்பி கெஞ்சினார்கள். பேரம் படியவில்லை. அவர்கள் முகம் சுருங்கி விக்கித்து நின்றார்கள்.

அவர்களிடம் சென்று என்ன விஷயம் என்றவனுடன் அவர்கள் சொன்னது.. சென்னை வேலைக்கு வந்து 2 வருஷம் ஆகி விட்டதாம். 25 நாள் 10 சுமார் மணி நேரம் நாள் ஒன்றுக்கு வேலை செய்தால் ரூபாய் 12500 வருமாம். அதில் இவர்கள் செலவு போக 7500 ரூபாய் அங்கு அவர்கள் குடும்பத்துக்கு அனுப்பி விடுவார்களாம்.

சென்ற தீபாவளி சென்றது இந்த தீபாவளி செல்ல வேண்டும் என்றார்கள். ஆட்டோகாரரிடம் சென்று “என்னப்பா.. சென்ட்ரலுக்கு 6 கிமீ தானே கிமீ 50 ரூபாயா கேக்குறே.. ஊரு விட்டு ஊரு வந்து வேலை செய்யிற இவுங்களை பார்த்த பாவமான இல்லையா” என்றவுடன்,. அவர் வட இந்தியர்கள் திட்டி கூறிய வார்த்தைகள் பீப் பீப் ரகம். பதிய முடியாது.

சரி எவ்வளவு தான் கடைசியா முடியும் என்றேன்.. 220 ரூ ஓகே என்றார். இந்த பிடிங்க 120 என்று கொடுத்து விட்டு, அவர்களிடம் 100 மட்டுமே வாங்கி ட்ரோப் பண்ணிடுங்க என்றே அனுப்பி வைத்தேன்.

அந்த முன்றில் இரண்டு பேர் சிறுவர்கள் ஒருவருக்கு சுமார் 60 வயது இருக்கும்.. அவர் கையை பிடித்து கொண்டு “சுக்ரியா” என்றார்.. உங்கள் பீகார் மொழில் சொல்லுங்க என்று சிரித்தேன். மறுபடியும் முழிமுழிப்பு..

ஆட்டோவில் ஏறி செல்லும் போது திரும்பி பார்த்து கூப்பிய கைகள் ஊடே அவர் கண்களில் பனித்த நன்றியின் மகிழ்ச்சி., நினைவுகளை கிளறியது.
நிற்க**


புத்தரை (563 BCE – 483 BCE) அவர் போதித்த நெறிகளை இன்றும் உலகெங்கும் ஏற்று வாழும் 376 million (6% of world population) மக்களை தந்த நிலம் அது..

உலகத்திலே அதி சிறந்த கல்வி கூடம் நாளந்தா என்ற இடத்திலே அங்கு இயேசு பிறப்பதற்கு முன்னே 600BC அதாவது சுமார் ரெண்டயிரம் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே 2,000 teachers and 10,000 students கொண்டு இயங்கியதை கல்வெட்டுகளும் மட்டுமில்லை, சீன வழிப்போக்கர் மொழில் கூட குறித்து வைக்கப்பட்டுள்ளது.

Inspired by the journeys of Faxian and Xuanzang, the pilgrim, Yijing (also known as I-tsing), arrived in India in 673 CE. அவர் இந்தியாவில் இருந்த ஆண்டுகளில் 14 ஆண்டுகள் இன்றைய பீகார் அன்றைய தலைநகரத்தில் 10 ஆண்டுகள் இருந்தும் உள்ளார்..

இந்தியாவை கட்டி ஆண்ட மகத சாம்ராஜ்யம் மையப்புள்ளி :
♦️ Haryanka dynasty (c. 600 – 413 BCE)
♦️ Shishunaga dynasty (413–345 BCE)
♦️ Nanda Dynasty (345–321 BCE)
♦️ Maurya Empire (c. 325 – c. 185 BCE)
♦️ Shunga Empire (c. 185 – c. 75 BCE)
♦️ Kanva Empire (c. 75 – c. 30 BCE)
♦️ Satavahana Empire (c. 30 – c. 320 CE)
♦️ Gupta Empire (c. 321 – c. 550 CE)
♦️ Pala Empire (c. 750 – c. 1162 CE)

அந்த காலத்திலே அப்போது அங்கு ஹிந்தி கிடையாது. ஹிந்தி மொழி என்பது உருது சமஸ்க்ரித அரேபிய கலவையில் முழுவதுமாக உயிர் பெற்று சுமார் 10th AD வருகிறது.

அது அப்போது முகலாய ஆப்கான் கிழக்கு ஐரோப்பிய படை வீரர்கள் மட்டுமே பேசி கொண்டு இருந்த ஒரு மொழி. மெதுவாக அது நுழைய, 16 நூறாண்டுகளாக பெருமையுடன் இயங்கிய பல்கலைக்கழகம் 12th AD மூடப்படுகிறது.

பின்னர் அதனை தனி சட்டம் மூலம் UPAII உயிர்ப்பித்து விடுகிறது. The Nalanda University Bill, 2010 was passed on 21 August 2010 in Rajya Sabha and 26 August 2010 in Lok Sabha. The bill received Presidential assent on 21 September 2010 thereby becoming an Act.

ஆனால் ஹிந்தியால் 12th century சூழப்பட்ட வென்று எடுக்கப்பட்ட போஜ்புரி நிலைமை‼️


அண்ணாவை படிக்கும் போது அவர் சொல்லிய ஒரு விஷயம் புரிபடாமல் இருந்தது. புரிபடாமல் இருந்தது என்று சுற்றிவளைக்காமல் நேரிடையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது என்றும் சொல்லலாம்.

அவர் ஹிந்தியை எதிர்க்கும் போது வேறு மொழியை ஏற்று கொள்ளும் ஒருவரது நிலை மூன்றாம் தர குடிமகனாக அவர்களை (தமிழனை) அது ஆக்கி விடும் என்றார்.

How is it possible‼️ learning languages is not the process of expansion of one’s knowledge⁉️ why such short sight vision from anna was surfaced at that time while i read..

இந்தியாவை கட்டி ஆண்ட, உலகத்திற்கு கல்வி வழங்கிய அந்த போஜ்புரி மொழி மறந்த ஹிந்தி பேசும் முதியவரின் கண்களில் பனித்த நன்றியின் சிரிப்பு வாசிக்கும் போது.. புரியாததை புரிய வைத்தது, தெளிய வைத்தது, அனுபவம் தான் எவ்வவளவு பெரிய ஆசான்..

நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி 🙏
Ref : Bronkorst, J; Greater Magadha: Studies in the Culture of Early India (2007)
Ghosh, Amalananda (1965). A Guide to Nalanda (5 ed.). New Delhi: The Archaeological Survey of India.
Scharfe, Hartmut (2002). Education in Ancient India. Handbook of Oriental Studies. 1

சமூக வலைதளத்தில் காண: https://www.facebook.com/savenra/posts/2223886764303901