இந்திய விமான படையில் சேர்ந்து, 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்கேற்றவர் பெண் விமானி குஞ்சன் சக்சேனா. அவரது வாழ்கை வரலாறு கதையாக உருவானது குஞ்சன் சக்சேனா இந்தி படம்.
நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள இப்படம் நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 10 இந்திய படங்களில் ஒன்றாக குஞ்சன் சக்சேனா படம் இடம் பிடித்திருக்கிறது.
இந்நிலையில் இந்திய விமானப்படை இப்படம் மீது தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கிறது. தங்கள் அதிகாரிகளை மோசமான முறையில் படத்தில் காட்டும் காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நெட்ஃபிக்ஸ் மற்றும் மத்திய தணிக்கை குழு ஆகியோரிடம் கூறி உள்ளது.
[su_image_carousel source=”media: 16701,16702″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]
விமான படையில் பயிற்சி பெறும்போது அதிகாரிகள் மற்றும் இணை விமானிகளால் ஜான்வி அவமதிக்கப்படுவது போல் காட்சிகள் உள்ளன. குறிப்பிட்ட காட்சிகள் இந்திய விமானப் படை மீது தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும், எனவே அக்காட்சிகளை அதனை நீக்கக் இந்திய விமானப்படை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: கொரோனா தொற்றால் பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை கவலைக்கிடம்