தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட குழுவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் கைது செய்யப்ட்ட மாணவி சோபியா கூட துப்பாக்கிச்சூடு போது வாயில் குண்டால் சுடப்பட்ட ஸ்னொலின் குரலை தான் வெளிப்படுத்த்னார் என்ற கருத்தும் சமூகவவலைதளத்திலே பரவலாக பதியப்பட்டது..
துப்பாக்கிச்சூடு தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். பல அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து வேறு வழியின்றி தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. மேலும் நிரந்தரமாக மூட தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வுசெய்ய ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் பசுமை தீர்ப்பாயம் குழு நியமித்தது.
பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட குழுவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.