இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, ராஞ்சியில் உள்ள தன் பண்ணைத் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார் எம்.எஸ்.தோனி. அதன்பிறகு சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
விவசாயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள செம்போ கிராமத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் காய்கறிகளைப் பயிரிட்டுள்ளார்.
இங்குள்ள 43 ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஏக்கர்களில் ஸ்ட்ராபெரி, தக்காளி, முட்டைக்கோஸ், பட்டாணி, பப்பாளி என பலவகை காய்கனிகளை விளைவித்து உள்ளார். இவற்றுக்கு ராஞ்சியில் நல்ல கிராக்கி இருந்தும் தோனி காய்கனிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளார்.
[su_image_carousel source=”media: 20951,20952″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
இந்த ஏற்றுமதிக்கான பொறுப்பை ஜார்கண்ட் மாநில விவசாயத்துறை எடுத்துக் கொண்டுள்ளது. துபாயில் உள்ள ஆல் சீசன் ஃபார்ம் ஃப்ரெஷ் (All Seasons Farm Fresh) ஏஜென்சி மூலம் தோனி தோட்டத்துக் காய்கறிகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
மேலும், இயற்கை விவசாய முறையில் தயாரிக்கப்பட்ட இந்த organic காய்கறிகள், தோனி வீட்டு காய்கறிகள் என்ற பெயரில் இது வளைகுடா நாடுகள் முழுதும் சப்ளை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
எம்.எஸ்.தோனிக்கு துபாயில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது புத்தாண்டை தோனி தன் குடும்பத்துடன் துபாயில் தான் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை முறைகேடு; முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்