தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு நாளை (ஜனவரி 4) தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு, பொது பிரிவு, இடஒதுக்கீடு பிரிவு கலந்தாய்வு டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடந்தது.

அதேபோல் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரையும் நடந்தது.

இந்நிலையில், 2 ஆம் கட்ட கலந்தாய்வு வரும் நாளை (ஜனவரி 4) தொடங்குகிறது. அன்றைய தினம், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்கிறது. பின்னர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி நண்பகல் வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 11 ஆம் தேதி பிற்பகல் முதல் 13 ஆம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வில் அனுமதி கடிதம் பெற்றும் கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் முதல்கட்ட கலந்தாய்வில் காலியாகவுள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்வு-மத்திய அரசு