சபரிமலையில் பெண்கள் அனுமதிக்க கூடாது என்ற போராட்டதை நடத்தி அதன் மூலம் வோட்டுகளை அல்லலாம் என்ற ஆசையில் இருந்த பாஜக , கேரள உள்ளாட்சி இடைத்தேர்தலில் டெபாசிட்  இழந்து படுதோல்வியைச் சந்தித்தது சமூக வலைதளங்களில் கடும் கேலிக்குள்ளாகி இருக்கிறது.
 
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் செங்கனூரில், அம்மாநில பாஜகவினர் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்தான் ஒரு உத்தியை நாட்டுக்கே முன்மாதிரியாகச் செயல்படுத்த எண்ணி இதை அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்திலும் பகிர்ந்திருந்தனர்.
 
ஆனால் இதை பார்த்த நெட்டிசன்ஸ்  பந்தளத்தில் பாஜக-விற்கு விழுந்த 12 ஓட்டுகளில் 2 இவர்களுடையது தான் ஆனால் பாக்கி பத்து ஓட்டு எங்கே என சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.