கொல்லபட்ட கனகராஜ் டிரைவரை ஜெயலலிதாவிடம் சேர்த்தது எடப்பாடி பழனிசாமி தான் என வெற்றிவேல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சொன்ன நிலையில் ..
“என் தம்பி மரணத்துக்கு தமிழக முதலவர் எடப்பாடி தான் காரணம்” ஜெ டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் கதறிய நிலையில் ..
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது விபத்துதான் என்று சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது. மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கியது.
மேலும் படிக்க : கொடநாட்டு 5 தொடர் மரணங்கள் அதிமுக முதல்வர் எடப்பாடியின் மேல குற்றசாட்டு பிண்ணணியில் திமுக வைக்கும் அதிரடி கேள்விகள்
பின் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே கார் விபத்தில் இறந்தார். இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை தொடர்பான தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு விடியோ காட்சித் தொகுப்பை கடந்த 11-ஆம் தேதி வெளியிட்டார்.
அந்த விடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கும், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறந்ததற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் கூறுகையில்,ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது விபத்துதான் என்றும் மேலும் விபத்தை நேரில் பார்த்ததாக எந்த சாட்சிகளும் இல்லை என்றும்.,
விபத்தில் உயிரிழந்த கனகராஜ் உடற்கூறு ஆய்வில் அவர் மது அருந்தியது தெரியவந்தது என்றும் அரசு வேலையில் இருக்கும் அவர் முதல்வர் எடப்பாடி கைவசம் இருக்கும் காவல்துறையில் உயர் அதிகாரியாக இருக்கும் அவர் தெரிவித்தார்.