“இந்தியன் 2” படத்தின் பா்ட்ஸ் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, சிம்பு இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் “இந்தியன் 2” படத்தை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. படத்திற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் கமல்ஹாசனின் பிறந்த நாளில் வெளியிட்டது.

இந்நிலையில் பொங்கல் திருநாளான இன்று இந்தியன் 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் படத்தில் கமல்ஹாசன் செய்த வா்மக்கலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போதைய பா்ஸ்ட் லுக் போஸ்டரிலும் கமல்ஹாசன் வா்மக்கலையுடன் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சிம்பு இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்துக்கு சிம்பு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இயக்குனர் ஷங்கரிடம் சிம்பு இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று லைகா நிறுவனம் கூறியதாகவும், அதற்கு ஷங்கர் யோசிக்காமல் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவிற்குப் பதிலாக அந்த வேடத்தில் சித்தார்த் நடிக்க இருப்பதாகவும் படக்குழுவினர் சித்தார்த்தை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும், படப்பிடிப்பு பணிகள் வருகின்ற 18ம் தேதி தொடங்க உள்ளதாக தொிவித்துள்ளன.