ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தீவிபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 21 லட்சத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பெரும்பாலான மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது.

இதனால் அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள், தனியார் ஹோட்டல்கள், வர்த்தக மையங்களில் கொரோனா வார்டுகளை அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையமாக செயல்பட்டு வரும் சொர்ணா பேலஸ் ஹோட்டலில் கொரோனா தனிமை மையம் அமைக்கப்பட்டு, இந்த மையத்தில் 40 நோயாளிகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் 10 பேர் என மொத்தம் 50 பேர் இருந்தனர்.

[su_image_carousel source=”media: 16576,16577″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]

மேலும் வாசிக்க: கொரோனாவைக் குணப்படுத்தும் அப்பளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சருக்கு கொரோனா..

இந்த மையத்தில் இன்று அதிகாலை 5 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்திலிருந்து உயிர் பிழைக்க நோயாளிகள் அங்கும் இங்கும் ஓடியும், மாடிகளில் இருந்து குதித்தும், தப்ப முயற்சித்தும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். மேலும் தீவிபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த வியாழனன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.