தமிகத்தில் வாக்காளர்கள் அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
 
மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
 
அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 78 சதவீதமும், சிதம்பரம் தொகுதியில் 76.03 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 75.18 சதவீதமும் பதிவாகியுள்ளது.
 
குறைந்தபட்சமாக சென்னை சென்ட்ரலில் 57.05 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
 
மதுரையில் 6 மணி நிலவரப்படி 60.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மதுரையில் 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இன்னும் ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் இதை இறுதியானதாக கருதமுடியாது.
 
மதுரையிலும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதம் மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 86.96 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூர் தொகுதியில் 60.87 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
 
ராணிபேட்டையில் ஒரு பூத்தில் வானத்தை நோக்கி சூட்ட ஒரு சம்பவத்தை தவிர வேறு எந்த இடத்திலும் வன்முறை நிகழ்ந்ததாக இல்லை என தெரிவித்த சத்யபிரதா சாஹு .,
 
பிழை காரணமாக மாற்றப்பட தேர்தல் இயந்திரங்கள் பின்வரு விவரத்தை வெளிட்டார் :
 
தேர்தலுக்கு முன் (mock test ) போது மாற்றப்பட்ட விவரம்
EVM : 443 
Control Unit : 406
VVPAT : 727 
 
தேர்தலுக்கு நடக்கும் போது (mock test ) போது மாற்றப்பட்ட விவரம்
EVM : 375
Control Unit : 228
VVPAT : 776 
 
மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 70 முதல் 72 சதவீதம் வரை எதிர்பார்க்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.