தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு காரணம் தென் மண்டல காவல்துறை ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் மற்றும் டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கர் இருவரும்தான் என்றும் காவல்துறை ஸ்டெர்லைட் வேதாந்தாவின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் அண்மையில் வீடியோ ஆவணங்களை சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
 
மேலும், அத்தனை ஆவணங்களையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,  மூன்று  நாள் முன்பு  இரவு சென்னையிலிருந்து ஊருக்குச் செல்வதாக திட்டமிட்டிருந்த முகிலனை  காணவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது.
 
 
சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என்கிற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகிவருகிறது.
 
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் எடுப்பது தொடர்பாக கடந்த 2017-ல் கைது செய்யப்பட முகிலன் ஒருவருடத்துக்கும் மேலாக மதுரை சிறையில் இருந்தார்.
 
பின்னர், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
 
முகிலன் காணவில்லை என்கிற செய்தி தீ போல பரவிக் கொண்டிருப்பதை அடுத்து அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட போது . ‘எங்களுக்கும் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்கள்தான் அவர் எங்கிருக்கிறார் என்று அறிய எங்களுக்கு உதவ வேண்டும்’ என்றனர்.
 
அதிமுக அரசு 13 பேரை படுகொலை செய்த நிலையில் அதனை வெளிபடுத்திய முகிலன் மாயமானது இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது . மேலும் இது சம்பந்தமாக மூத்த வழக்கறிஞர் சுதா அவர்களின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு நாளை வரவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது..