ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு சிபாரிசு செய்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
காங்கிரஸ், பா.ஜனதா இடையே கடும் வார்த்தை போர் நீடிக்கிறது. இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடியும், அருண் ஜெட்லியும் பொய்சொல்வதை நிறுத்த வேண்டும், விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை குழுவை அமையுங்கள், உண்மை வெளியே வரும். ஆனால் அருண் ஜெட்லியின் பாஸ் பிரதமர் மோடி இதனை செய்ய முடியாது. பிரதமர் மோடி அதிகமாக பேசுகிறார். ஆனால் ரபேல் தொடர்பாகவும், அனில் அம்பானி தொடர்பாகவும் அவர் பேச மறுக்கிறார்,” என கூறியுள்ளார். ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தியின் சூடான கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் அருண் ஜெட்லியும் பதிலளித்து வருகிறார். அவரை குறிப்பிட்டு ராகுல் பதிலளித்துள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் ஊழல் வெளியிடப்படும். இதில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு கொள்ளையடித்தது என்று காங்கிரஸ் கட்சி ஆதாரத்துடன் வெளியிடும் என்றும் இதில் அனில் அம்பானிக்கு உதவியதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஊழலுக்கு துணை நின்றுள்ளார் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, ஊழல்வாதியான அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை வழங்கியுள்ளார். ஆனால் எவ்வாறு ரூ.45 ஆயிரம் கோடி கடனில் உள்ள அனில் அம்பானியிடம் இந்நாட்டின் இளைஞர்களின் பணத்தையும், இந்திய விமானப் படையையும் அடகு வைத்த பிரதமர் மோடி தான் உண்மையான திருடன் என்றும் மேலும் இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு பிரதமர் மோடியால் எனது கண்களைப் பார்த்து பதிலளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், விஜய் மல்லையா, லலித் மோடி, பணமதிப்பிழப்பு விவகாரம் மற்றும் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் பிரதமர் மோடி தான் முக்கிய திருடன் என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்தார இதனால் அரசியல் களம் சூடு பிடித்து உள்ளது ..
மேலும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் பங்கு எப்படி ஊழல் நடந்தது பற்றி அறிய