மலையாளத்தில் தயாராகி வரும் ‘ஒரு ஆடார் லவ்’ படத்திலிருந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் சிங்கிள் டிராக் ஒன்று வெளியானது. அதில், நடிகை பிரியா பிரகாஷ் வாரியார் கண்ணடிப்பது போல இடம்பெற்ற காட்சி, நாடு முழுவதும் வைரலானது. அதில் நடித்த பிரியா வாரியர் மிகவும் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து, பிரியா வாரியர் எது செய்தாலும், அது ஒரு செய்தியாக மாறியது. இந்நிலையில், ‘ஒரு ஆடார் லவ்’ படத்திலிருந்து ஒரு சிங்கிள் டிராக் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. ‘பிரீக் பெண்ணே’ எனத் தொடங்கும் அப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலானது. ஆனால், அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

இதுவரை ஒரு கோடி பேர் பார்த்துள்ள அந்தப் பாடலுக்கு, 1.3 லட்சம் பேர் லைக்கும், சுமார் 6.8 லட்சம் பேர் டிஸ்லைக்கும் கொடுத்துள்ளனர். இதில் தமிழ்நாட்டு இளைஞர்கள் பெரும்பாலானோர் பிரியா வாரியரைக் திட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன் உச்சத்தில் இருந்த பிரியா வாரியரை, ஒரே பாடலில் கீழிறக்கிவிட்டனர்.

தொடர்பு செய்திக்கு: பாட்டு பாடினால், கேஸா… ப்ரியா வாரியர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி