நேற்று திமுக காங்கிரஸ் தேர்தல் கூட்டணியை நாகர்கோவிலில் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் வெற்றி கரமாக தொடங்கி விட்ட நிலையில் , அதிமுக கூட்டணியில் தொகுதிகளை பிரிப்பதில் நீடிக்கும் இழுபறியால் பாஜக கலக்கமடந்து விருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன 

நேற்று நடைபெற்ற நாகர்கோவில் தேர்தல் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவருடன் திமுக தலைவர்

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக – 7, பாஜக – 5, தேமுதிக- 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
 
தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், சிதம்பரம், நாகை, மயிலாடுதுறை, மதுரை, தேனி, நெல்லை தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நிலவும் நிலையில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தின் முடிவில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப்பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதிப்பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.
 
வடதமிழகத்தில் 3 தொகுதிகளை முக்கியமாக ஆரணி அரக்கோணம்  தொகுகிகளை பாமக-வும் தேமுதிகவும் ஒன்றாக கேட்பதே தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நிலவுவதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
 
இது சமபந்தமாகவே விஜயகாந்த்தை ., பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அவரது இல்லத்தில் சந்த்தித்து சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளவும் ஏற்பாடுகள்  செய்து சந்திப்பும் நடந்து  உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன
 
இந்த   பாமக தேமுதிக மோதல் காரணமாகவே  தொகுதிப்பட்டியல் பின்னர் வெளியாகும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார் என்கிறது உட்கட்சி விவகாரம் .. 
 
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன், பன்னீர்செல்வமும், தேர்தல் பங்கீட்டு குழு உறுப்பினர் வேலுமணியும் நேற்று நள்ளிரவில் ஆலோசனை நடத்தினர்.
 
இரவு 10 மணிக்கு மேல் துவங்கிய இந்த ஆலோசனை நள்ளிரவு வரை நீடித்ததும் ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் .. 
 
இது தொடர்பாக இப்படி முறுக்கும் பாமக.,  அதை எதிர்க்கும் தேமுதிக நிலையால் விழிபிதுங்கும் அதிமுகவை கண்டு  மூன்று சுற்று ஆலோசனை நடத்தியும் ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்பதால் ..
 
திமுக காங்கிரஸ் கூட்டணி நேற்று வெற்றிகரமாக தொடங்கி விட்ட தேர்தல் பிரச்சாரத்தை பார்த்து பாஜகவும் கலக்கத்தில் உள்ளதாம்.