விஸ்வாசம் மோஷன் போஸ்டர் (Viswasam motion poster)

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்தனர். அதன் பிறகு தல ரசிகர்கள் எவ்வளவோ கெஞ்சியும் ஒரு அப்டேட் கூட வெளியாகவில்லை.

இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தூக்குதுரைனா அடாவடி என்று துவங்கும் மோஷன் போஸ்டரின் இறுதியில் தல சால்ட் லுக்கில் கெத்தாக வருகிறார். மோஷன் போஸ்டருடன் சேர்த்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, யாரும் எதிர்பாராத வகையில் நேற்று இரவு அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி எல்லோருக்கும் அதிர்ச்சியை தந்தது. இந்த போஸ்டர் தற்போது 18 மணி நேரத்திற்கும் மேலாக டிரண்டிங்கில் உள்ளது.

ரஜினியின் ‘பேட்ட’ பட மோஷன் போஸ்டருக்கு யூடியூபில் 1,43,000 லைக்ஸ்கள் கிடைத்துள்ள நிலையில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட மோஷன் போஸ்டருக்கு ஒரே மணி நேரத்தில் 1,57,000 லைக்ஸ்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது வரை 2,39,000 லைக்ஸ்கள் மேல் பெற்று இந்தியாவிலேயே அதிக லைக்ஸ்கள் பெற்ற மோஷன் போஸ்டர் என்ற சாதனையை பெற்றுள்ளது.

மேலும் ‘விஸ்வாசம்’ மோஷன் போஸ்டர் யூடியூபில் இந்தியாவில் நம்பர் 1 இடத்திலும், கட்டார் நாட்டில் 8வது இடத்திலும், இலங்கையில் 23வது இடத்திலும் டிரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது விஸ்வாசம் படத்தில் தன் பணிகளை முடித்துவிட்டதால், அஜித் ஜெர்மனிக்குப் சென்றுள்ளார். பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவரைச் சந்தித்த ரசிகர் ஒருவர் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அஜித் தனக்குப் பிடித்த ஏரோ மாடலிங் (Aero Modelling) பணிக்காக ஜெர்மனி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.