யோகிபாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பப்பி’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
பப்பி திரைப்படத்தின் மோஷன் போஸ்டரில் ஆபாச படங்களில் நடிக்கும் ஜான்னி சின்ஸ் புகைப்படம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இந்து மத சாமியாரான நித்யானந்தா புகைப்படமும் இருப்பது போன்று இருந்தது.
இந்த மோஷன் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து படக்குழுவினர்களுக்கு நித்யானந்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தன்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதாக நித்யானந்தா அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது
ஏற்கனவே இந்த மோஷன் போஸ்டர் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் சென்னை போலீஸில் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த மோஷன் போஸ்டரில் ஆபாச படங்களில் நடிக்கும் ஜான்னி சின்ஸ் புகைப்படம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இந்து மத சாமியாரான நித்யானந்தா புகைப்படமும் இருப்பதாகவும், இந்த மோஷன் போஸ்டர் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதனையடுத்து இந்த படத்தின் இயக்குனர் உள்பட படக்குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.