தமிழ் #புத்தாண்டு தை முதல் நாள் என்று தமிழ்நாடு அரசு விரைவில் சட்டத்தின் மூலம் அறிவிக்க இருக்கும் நிலையில்.. பிரபல கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரி அவர்களின் இணைக்கப்பட்ட பதிவு கண்ணில் பட இது ஒரு விஷமத்தனமான பதிவு என்று ஒதுக்கிவிட்டு ஒதுங்க முடியவில்லை..

60 வருடத்தில் ஒரு வருடம் #தமிழ் வருடம் இல்லாமல் விந்து விகாரி துஷ்ட குணம் படைத்தவள் என்ற பெயர் உள்ள சமஸ்கிருத ஆண்டுகளை எல்லாம் தமிழர் தலையில் கட்டிவிட்டு.. இதனை இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆகமத்தின் பெயரில் போலி பஞ்சாங்கத்தை சொல்லிய கயமத்தை நீக்கிட..

அந்த அவலத்தை துடைக்க முற்பட திராவிட இனத்தின் மூத்த மொழி தமிழ் பேசுபவர்கள் போராடி செயலில் இறங்கும்போது.. ஜஸ்ட் லைக் தட் இப்படி ஏதாவது உளறி தள்ளிவிட்டு அதை #பகடி என்று பசப்புவது இந்த ஒர் பத்ரி மட்டுமல்ல..

சமஸ்கிருதத்தை தேவ பாஷை என்று பிதற்றி திரியும் மூடர் கூட்டத்தின் ஒர் ஜாதி குழுமினர் பலரும் இப்படியே தான் உணர்வதும் உண்டு..

வேறு வழி இல்லை சரி இவர்கள் வழிக்கே சென்று பதிலை தருவோம் என்று பின்வரும் பின்னூட்டத்தை செய்துள்ளேன் அவர் பதிவில்..

//உங்கள் அளவீட்டின்படி பார்த்தா அவிர்ப்பாகம் யாகத்தில் கொடுக்காததால் பேய் மழை கொண்டு வந்த அழிச்சாட்டியம் பண்ணிய இந்திரனின் கர்வத்தை அடக்க இனி யதுகுலத்தில் யாகமும் கிடையாது #ஸ்வாகா வும் கிடையாது எனக்கூறி கோவர்த்தன மலையை சுண்டு விரலில் தூக்கிய கோபத்துடன் கண்ணபிரான் சொன்னபடி இனி யாகங்களை அறவே ஒழித்து விடுவோமா பத்ரி சார். .// என்று கேட்டால் பதில் இல்லை.. இருக்கவும் இருக்காது..

காரணம் இவைகள் பத்திரிகளின் பிரச்சினைகள் அல்ல.. மாற்றப்பட வேண்டியது இந்து மதத்தின் செல்லரித்துப் போன வேத #ஆகமம் சட்டங்கள் யாகத்தின் பெயரிலே மோகமுற்றி இருப்பவர்களின் மனநிலை..

எப்படி கலாச்சாரத்தின் பெயரில் ஆகமத்தின் பெயரில் நடைபெற்ற பெண்ணடிமைத்தனத்தின் உச்சகட்டமான #உடன்கட்டை ஒழிக்கப்பட்டதோ..

எப்படி கோவிலுக்குள் குடியிருந்த #தேவதாசி ஆகமங்கள் திராவிடத்து நீதிக்கட்சியின் மூலம், அவைகள் சட்டம் ஏற்றி நிர்மூலமாக்கி அகற்றப்பட்டதோ..

எப்படி கேரளத்து திருவாங்கூர் அக்ரஹாரத்து தெருவுக்குள் மற்ற இந்துக்கள் செல்லக்கூடாது என்ற சட்டம் வந்தபோது அதை எதிர்த்து வைக்கம் வீரராக களமிறங்கிய #பெரியார் மூலம் தூள் தூளாக அந்த ஆகமங்கள் உடைக்கப்பட்டதோ..

எப்படி கோவில் கருவறைக்குள் இப்போதுதான் 97% ஆண்கள் செல்ல திராவிட திமுக ஆட்சியில் வழிவகை செய்யப்பட்டதோ..

அதுபோலவே கண்ணபிரான் சொன்னபடி யாகத்தின் அவிர்பாகத்தை #ஸ்வாகா சொல்வதையும் தவிர்த்திடலாமா.. கண்ணபிரான் சொல்லிவிட்டால் மேல்முறையீடு எதுவும் உண்டோ..

நீங்கள் உரைத்த கண்ணபிரான் பெயரிலே பணிந்து கேட்கிறேன்.. பழைய பஞ்சாங்கத்தை கட்டி அழுது வடியும் எனதருமை சகோதர பத்ரிகளே அருள்கூர்ந்து பதிலுரையுங்கள்..

https://www.facebook.com/savenra/posts/7461997210492804