தேர்தல் முடிவுக்குப் பிறகு, மத்திய உளவுத் துறையான ஐ.பி, மாநிலம் முழுவதும் ரகசிய சர்வே ஒன்றை எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
 
அந்த அறிக்கை குறித்து நம்மிடம் கிசுகிசுத்த அதிகாரிகள், பாமக , தேமுதிக பாஜக அதிமுக அமைத்தவுடன் இந்த மெகா கூட்டணி தேர்தலுக்கு முன்பு பின்வரு இடங்களை ஒவ்வொரு கட்சியும் துல்லியமாக
 
பாமக 6, பாஜக 3 , தேமுதிக 1 , அதிமுக 16 என மொத்தம் 26 தொகுதிகளை கைபற்றும் என கூறியது.
ஆனால் நாள் செல்ல செல்ல அதிமுக கூட்டணி கட்சிகளின் முக்கியமாக தேமுதிக பிரமலதா எடப்பாடி அரசை கேவலமாக விமர்சித்த விவகாரம் ஆகட்டும் பாமக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒபிஎஸை டயர்நக்கிகள் என ஆவேசமாக கூறியதை திரும்ப திரும்ப கூறி , அதிலும் முக்கியமாக தமிழ் நாடே வெறுக்கும் மோடியின் கூட்டி அதிமுக வை வெகுவாக பாதித்தாக கூறும் அந்த அறிக்கை .,
 
அ.தி.மு.க-விற்கு  சாதகமாக  நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கும் என முதலில் கொடுத்த அறிக்கை அப்படியே மாறிவிட்டது. அ.தி.மு.க பி.ஜே.பி இடையே ஏற்பட்ட கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வாக்குப்பதிவு முடிந்தபிறகு கண்கூடாக அறிந்துகொள்ளமுடிந்தது எனவும்.,
 
இந்தக் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால்கூட அ.தி.மு.க ஆறு   இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்திருக்கும் எனவும்., 
 
தேர்தல் முடிவுக்குப் பிறகு நாங்கள் நடத்திய ஆய்வில், நடைபெற்ற 38 தொகுதிகளில் நாடாளுமன்றத் தொகுதிகளில் 36 இடங்களைக் கண்டிப்பாக தி.மு.க கூட்டணி பெற்றுவிடும் என இரண்டாவது அறிக்கை கூறுகிறது ..அதன் விவரம் வருமாறு
 
காங்கிரஸ் : 8 ; இடதுசாரிகள் : 4, முஸ்ஸிம் லிக் :1 ; திமுக : 22 ; விசிக : 1
 
 

மேலும் படிக்க :16.74 கோடி வரி ஏய்ப்பால் போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கம்

 
அதேபோல,  18 சட்டமன்றத் தொகுதிகளில் 14 தொகுதிகள் கண்டிப்பாக தி.மு.க வெற்றிபெறும் என்றும் கூறும் அந்த அறிக்கை .
 
ஆனாலும் மீதம் உள்ள 4 தொகுதிகளில் கூட முழுமையாக அ.தி.மு.க வெற்றியைப் பெற்றுவிடும் என சொல்லமுடியாது. அதிலும், சில தொகுதிகளில் தி.மு.க-அ.தி.மு.க தினகரன் அணி இடையே போட்டி அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
 
மேலும் அந்த இரண்டாவது அறிக்கை சொல்லிய இறுதி விவரம் தான் பகீர் ரகம்
தற்போதைய சட்டமன்றத்தின் நிலை :
சபாநாயகர் =1
சுயேச்சை =3
., தினகரன் அணி = 4
., திமுக + = 97
., அதிமுக =107
., தேர்தல் முடிவுகள் வர இருப்பவை  :22., ஆக 
மொத்தம் : 234 தொகுதிகள் ..
 
ஆக அதிமுக 22 சீட்டுகளில் 10 சீட்கள் பெற்றாலே மட்ட்தும் தான் இனி அதிமுக அறுதிபெருன்பான்மை அரசுசாக அமையும் என்பது திண்ணம் எனவும் ., 
 
ஆனால் வரும் நாட்களில் திமுக கூட்டணி 18 இடங்களில் வென்றாலே .,
அதிமுக வை தற்போது எதிர்க்கும் 3 சுயேச்சை MLA க்கள் ஆதரவை வாங்கி கொண்டு முதலில் சபாநாயகரை மாற்றி விட்டு பிறகு பாஜக RSS முகமுடியான அதிமுக ஆட்சியை தூக்கி எறியவதே சிறந்த அணுகுமுறையாக இருக்கம் என திமுக தலைமை முடிவு செய்து விட்டதாக வந்த அந்த அறிக்கையை படித்த பாஜக தலைமை மற்றும் அர்எஸ்எஸ் அதிர்ந்து போய் விட்டதாம் ..
 
இதன் காராணமாகவே அதிமுக சட்ட அமைச்சர் திரு சி.வி சண்முகம், அரசு கொறடா திரு. ராஜேந்திரன் ஆகியோர் நேர்று அதிரடியாக பேரவைத் தலைவரை சந்தித்து இதுவரை நீக்காத தினகரன் அணி சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக அறிவுரைப்படி மனு அளித்து உள்ளார்களாம் .
 
இப்படி செய்வதால்  8 தொகுதிகள் அதிமுக வென்றாலே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்குமாறு அமித்ஷா மோடி காம்போ அதிமுகவை பணித்துள்ளதாம் ..
 
ஆனால் இதை மூலம் திமுகவுக்கும் சாதகமே என் சொல்லும் அரசியல் விமர்சகர்கள் இந்த 3 MLA க்கள் நீக்கி விட்டால் திமுக 16 தொகுதிகள் வென்றாலே ஆட்சியை பிடித்து விடலாம் என்வும்  சொல்கிறார்கள் ..
 
மே மாதம் 23ம் தேதி  பாஜக எண்ணப்படி நடக்கும் அதிமுகவின் ஆட்சி முடிவு தெரிந்து விடும் என்பதால் தமிழக மக்களும் தேர்தல் முடிவுகளுக்கு ஆர்வமுடன் உள்ளார்கள்..