அபிராமியின் முகநூலின் கடந்த ஒரு வருட செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் கடவுள் வழிபாட்டை தீவிரமாக விரும்பியிருக்கிறார் என்பது புலனாகிறது ..

அவரின் பக்கத்தில் முழுவதும் கோவில்களின் புகைப்படங்கள், விவரங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் வீடியோக்கள், பதிவுகள் தொடர்ந்து பதிவிட்டு வந்திருக்கிறார்.

Ambica Empire என்கிற சென்னையில் ஒரு மிக சிறந்த ஸ்டார் ஓட்டலில் பணிபுரிந்து வந்து இருக்கிறார் ..

தனது குழந்தைகள் படத்தை பல இடத்திலே திரும்ப திரும்ப பகிர்ந்தும் இருக்கிறார் ..

எப்படி ராம்குமார் சொல் வெளியே கடைசி வரை வரவில்லையோ அது போல அபிராமியின் சொல்லும் கடைசி வரை வெளிவரவே இல்லை.

சம்பவம் அன்று அவரின் கணவர் எப்படி வங்கியில் விடிய விடிய வேலை செய்தார் என்ற கேள்விக்கு போலிஸ் வெர்சன் பதில் நகைமுரண் ..

இதனால் எங்கயோ எதோ இடிப்பது போல ஒரு உண்ர்வு வருவதை தடுக்கவும் முடியவில்லை … logically something mismatch ..

இவர் தான் குழந்த்தையை கொன்றாரா ..அல்லது வேறு யாராவது செய்தார்களா என்ற கோணம் ஒரு புறம் இருக்கட்டும் that benefit of doubt of the accused ( fair trial) அதை பற்றி யோசிக்கவும் யாரும் விரும்பவில்லை..

தமிழ் நாட்டில் சில கிரிமினல் வழக்குகள் சென்சேசனலாக மாற்றப்பட்டு ஆளுங்கட்சியின் மீதான கவனம் திசை திருப்பப்படுகின்றதா என்ற சந்தேகம் சில வழக்குகளைக் கவனிக்கும் போது தோன்றும். ஆளும் அரசு சிக்கலில் சங்கடத்தில் இருக்கும் போது சில வழக்குகள் சென்சேசனலாக மாற்றப்படுகின்ற மாதிரி தோன்றுகின்றது என்கிற நம் வழக்கறினர் Prabakaran Ram நண்பரின் கருத்தையும் நாம் உள்வாங்க வேண்டியதாக உள்ளது ..

அது சரி இரும்பு மனுஷி என்று புகழப்பட்ட முதல்வர் மரணமே மர்மத்தில் நடைபெறும் நாட்டில் ஸ்வாதிகள் ராம்குமார்கள் அபிராமிகள் குரல் எப்படி சபை ஏறும் என்ற உங்கள் கேள்விக்கும் பதில் யாரிடமும் இல்லை..