திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.
இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி அவர்களை பெங்களூரில் கைது செய்து உள்ளதாக மே பதினேழு இயக்கத்தின் பிரமுகர்கள் தெரிவித்து இந்த அடக்கு முறையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்து உள்ளனர்.
தூத்துக்குடி படுகொலையின் குற்றவாளிகளை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியதல் இந்த கைது என்று அதிமுக அரசை கண்டித்து சமூகவலை தளத்திலே பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன.