கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகை சேர்ந்தவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் ஸ்ரீரெட்டி.

இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியுமான பிருத்விராஜ் மீது பாலியல் புகார் சாட்டியுள்ளார். மேலும் அவர் தன் பதிவில், ‘காமெடி பிருத்வி.. ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் ரோடு 10-ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் அமெரிக்காவிற்கு கலை நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளீர்கள். இந்த லட்சணத்தில் உங்களுக்கு எம்.எல்.ஏ. டிக்கெட் ஒரு கேடா..? என்று கூறியதோடு கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இது சினிமா உலகம் அல்லாமல் தற்போது ஆந்திர அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இத்தனையடுத்து, சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வரும் கிகி சேலஞ்சை ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி ஏற்று கவர்சிகரமான வீடியோவினை வெளியிட்டுள்ளார்.

பிரபலங்கள் பலரும் முன்னெடுத்து செய்து வரும் இந்த கிகி சேலஞ்சில், பிரபல பாப் பாடகர் டார்க்கியின் ‘In my feelings’ என்னும் பாடலினை வாகனத்தில் ஒலிக்க வைத்துவிட்டு வாகனத்தை விட்டு வெளியே வந்து நடனமாடிக்கொண்டு வானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பது தான்.

தற்போது தென்னிந்திய திரையுலகில் பெரும் சர்சையினை ஏற்படுத்தி வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இந்த கிகி சவாலினை ஏற்று படுகவர்சியாக நடமாடி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.