மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள், சங்கம் தொடங்கியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கோயம்பேடு அலுவலகத்தில் மெட்ரோ ஊழியர்கள் நேற்று தீடிர் என உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திடீரென இந்த போராட்டம் வலுப்பெற்று ஊழியர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மெட்ரோ ரயில் சங்கம் தொடங்கி பணிகளில் இடையூறு செய்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை உடனடியாக பணியில் சேர்க்க வலியுறுத்தியும், மெட்ரோ ரயில் நிர்வாகத்தைக் கண்டித்தும், கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில், மெட்ரோ ரயில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், இந்த போராட்டத்தினால் மெட்ரோ சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்த நிலையில் .,
பயணிகள் ரயில் சரியாக வராத காரணத்தினால் மறியலில் இறங்க அரசும் இறங்கி வந்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமையில், 2 தொழிலாளர் நல அதிகாரி, CITU சவுந்திரராஜன், பணிநீக்கம் செய்யப்பட்ட 8 மெட்ரோ ஊழியர்கள் மற்றும் மெட்ரோ நிர்வாகத்தினர் 2 பேர் ஆகியோர் ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன..
பணிநீக்கம் செய்யப்பட்ட 8 மெட்ரோ ஊழியர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மெட்ரோ ஊழியர்களின் பிரதான கோரிக்கை.