அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமி என்கிற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக கடந்த 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 01) காலை மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, பி.கே. சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் உடனிருந்தனர்.
மேலும் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள விஜயலட்சுமி உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியபின், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருமதி.விஜயலட்சுமி அவர்களின் மறைவு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பேரிழப்பு.
இல்லத் துணையை இழந்து வாடும் அண்ணன் @OfficeOfOPS அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/meq8p3s6Wu
— M.K.Stalin (@mkstalin) September 1, 2021
மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா.. எஸ்வி.சேகர் மீது நீதிமன்றம் கடும் தாக்கு