புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையின் படி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மத்திய கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரான கஸ்துாரிரங்கன் தலைமையிலான குழு தேசிய கல்வி கொள்கை குறித்த புதிய வரைவு அறிக்கையை, மத்திய மோடி அரசிடம் கடந்த ஜூலை 29-ல் தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் மத்திய கல்வி அமைச்சகம் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எனவும், கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க: ஆர்டிஐ சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது பிரதமர் அலுவலகம்.. முன்னாள் முதல் தலைமை தகவல் ஆணையர்